Wednesday, May 20, 2009

அது என்ன மரபணுச் சோதனை?
இறந்து போன ஒரு நபரை யாராலும் அடையாளம் காட்ட முடியவில்லை என்றால், அப்போது அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களையும், அவரது ரத்த சொந்தங்களின் மரபணுக்களையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றின் ஒற்றுமைகளின் அடிப்படையில் அடையாளம் காட்டுவார்கள். இதற்குப் பெயர்தான் டிஎன்ஏ சோதனை முறை.
இந்தச் சோதனையைச் செய்வது அத்தனை கடினமா… எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது?
டிஎன்ஏ செய்யப்படுவது அத்தனை எளிதான காரியமல்ல. முதலில் இறந்தவர் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்கள், எலும்பு மாதிரிகளை இந்த சோதனைக்கு சேகரிக்க வேண்டும். பின்னர் அவரது வாரிசு உள்ளிட்ட ரத்த பந்தங்களின் ரத்த அல்லது திசுக்களின் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். அவற்றில் கண்டுபிடிக்கப்படும் மரபணுக்களை வைத்து இறந்தவர், இன்னாருக்கு தொடர்புடையவராக இருக்கிறார் என்ற தகவலைச் சொல்ல முடியும்.
இதுகுறித்து சென்னை தடவியல் அறிவியல் மைய இயக்குநர் விஜயகுமார் கூறியதாவது:
“பொதுவாக ஒருவரது உடலில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் 22 ஆட்டோசோம்கள் எனப்படுபவை. மீதி ஒரு ஜோடி, பாலினத்தை தீர்மானிப்பவை. தாய் மற்றும் தந்தையர் இருவரது குரோமோசோம்களும் 50:50 என்ற விகிதத்தில் ஒருவரது உடலில் அமைந்திருக்கும்.
இவை எக்ஸ் மற்றும் ஒய் என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒருவேளை தாயின் மாதிரிகள் கிடைக்காமல் போனால், தந்தையின் திசு மாதிரிகளைக் கொண்டும் ஆய்வு நடத்தி ஒய் குரோமோசோம்களின் ஒத்திசைவைப் பொறுத்து முடிவு காண முடியும்.
ஆனால் இதையெல்லாம் செய்து முடிக்க 2 மணிநேரமல்ல… 20 மணி நேரம் இருந்தால்கூட போதாது. அதிலும் இந்த ஒய் குரோமோசோம் சோதனை முறை மிக மிக அரிதாகவே கையாளப்பட்டுள்ளது கடினமானதும் கூட!”

எ-1

ஒரு பெண் சற்றே பெரிதான வயிற்றை வைத்துக்கொண்டு இரவு ஒன்பது மணிக்கு அவசரம் அவசரமாக பதிவர் புருனோ போன்ற ஒரு நல்ல மருத்தவரை பார்க்க போயிருந்தாள்...கண்களில் தாரை தாரையாக கண்ணீர்,வார்டு பாய் அவள் உட்கார இடம் இல்லாதகாரணத்தால் அவன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.தாரைதாரையாக தண்ணீர் அவள் கண்களில்வந்து கொண்டே இருந்தது வரவேற்ப்பு அறையில் இருந்த டிவியில் கோலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது, ஆதி எப்போதும் போல் ஹீஸ்ட்டிரியா பேஷன்ட் போல் கத்திக்கொண்டு இருந்தான்.அவளுக்கான டோக்கன் எண்19 அவள் புடவை தலைப்பை வைத்து கேவி கேவி அழுததை பார்த்த வார்டு பாய் அவளை உடனே டாக்டரை பார்க்க அனுமதித்தான்.. அழுத கண்களுடன் வார்டு பாயிக்கு கண்களால் நன்றி சொல்லிய படியே அவள் உள்ளே சென்றாள்..மருத்துவர் உட்கார சொன்னார் அப்போதும் அவள் கேவி கேவி அழுவதை நிறுத்தவில்லை டாக்டர் பத்து நிமிடம் பொறுமை காத்தார்.. அவள் சற்றே சகஜ நிலைக்கு வந்து, கணவனை அழைத்து வராமல் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வினவினாள்.டாக்டர் பொறுமையுடன் சொன்னார் அதற்க்கு சாத்தியம் இல்லை என்று...டாக்டர்/ உனக்கு திருமணம் ஆகி எத்தனை மாதம் ஆகின்றது?அவள்/எழு மாதங்கள் டாக்டர்டாக்டர்/ எழு மாதம்தானா? அதற்க்குள் ஏன் கணவணுக்கு குக ஆபரெஷன் செய்ய ஆர்வமாய் இருக்கிறாய்?அவள்/அவள் அழுத கண்களுடன் டாக்டர் நான் ஆறுமாசம், என் தங்கை ஐந்து மாசம்,என்தங்கையோட நண்பி நாலுமாசம், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மூனு மாசம், எங்க வீட்டு வேலைக்காரி இரண்டு மாசம்,இதெல்லாம் விட கொடுமை எங்க பாட்டி ஒருமாசம் டாக்டர் என்று சொல்லி கேவி கேவி அழுதாள்.டாக்டர்/இதெல்லாம் ஆம்பளையா பொறந்தா சகஜம் என்று சொல்வதற்க்குள் அவள் வீருட் என்று எழுந்து புடவைதலைப்பாள் மூக்கை சிந்தியபடி எது சகஜம் டாக்டர் என் வீட்டு நாய் ஜீம்மி நாளு நாளா வாந்தி எடுத்துக்குனு இருக்கு டாக்டர் என்று அவேச பட்டாள். டாகடர் ஆர்வாமாகி உங்க கணவர் எப்படி இருப்பார் என்று கேட்க இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....